
‘ஸ்ட்ராபெரி’ மற்றும் ‘ஆருத்ரா’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மேதாவி படத்தை இயக்குகிறார் பா.விஜய்.
சு.ராஜா தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் ஜீவா மற்றும் அர்ஜுன் இணைந்து நடிக்கவுள்ளனர்.
ஹாரர் த்ரில்லராக உருவாகும் இந்த படத்தில் ராஷி கண்ணா நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் .

சாரா, ‘கைதி’ தினா, ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா சங்கர், ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், அழகம்பெருமாள், ரோகிணி ஆகியோரும் இந்தப் படத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். யுவன் இசையமைக்க, தீபா குமார் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். எடிட்டிங் பணிகளை ஷான் லோகேஷ் கவனிக்கவுள்ளார்.