புரூசெல்ஸ்

கொரோனாவால் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதால் பிரேசில் நாட்டின் சுகாதார அமைச்சர் நெல்சன் டீக் பதவி ஏற்று ஒரே மாதத்தில் ராஜினாமா செய்துள்ளார்.

கொரோனாவால் கடும் பாதிப்பு அடைந்துள்ள நாடுகளில் பிரேசில் ஒன்றாகும்.  இங்கு இதுவரை 2,20,291 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 14,962 பேர் உயிர் இழ்ந்துளனர்.   இது அந்நாட்டு மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.   இந்த கொரோனா பாதிப்பு வெகு நாட்களாகத் தொடர்ந்து வருகிறது.  கொரோனாவை கட்டுப்படுத்த தனிமைப்படுத்தலே சிறந்த வழி என உலக சுகாதார மையம் கூறி வருகிறது.

உலகின் பல நாடுகளிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   சென்ற மாதம் பிரேசில் நாட்டின் அதிபர் ஜெயிர் பொல்சனாரோ ஊரடங்கு பிறப்பிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் அப்போதைய சுகாதார அமைச்சர் லூயிஸ் மாண்டேட்டா ஊரடங்கு பிறப்பித்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார்.

இதையொட்டி அதிபருக்கும் அமைச்சருக்கும் இடையே கடும் கருத்து மோதல் உண்டானது.  கடந்த மாதம் 16 ஆம் தேதி அன்று சுகாதார அமைச்சரைப் பிரேசில் அதிபர் ஜையிர் பொல்சனாரோ பதவி நீக்கம் செய்தார்.  அதன்பிறகு நெல்சன் டீக் சுகாதார அமைச்சராக பொறுப்பேற்றார்.  தற்போது நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரித்து வருகிறது.

இரு தினங்களுக்கு முன்பு பிரேசில் நாட்டில் கொரோனாவால் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 14000 ஐ தாண்டியது.  அதையொட்டி பிரேசில் நாட்டின் தற்போதைய சுகாதார நெல்சன் டீக் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கிட்டத்தட்ட ஒரு மாத காலம் மட்டுமே பதவி வகித்துள்ள நிலையில் அவர் ராஜினாமா செய்தது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.