டில்லி

ச்சநீதிமன்றம் தனது கோடை விடுமுறையில் ஒரு பகுதியை ரத்து செய்துள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்தே நீதிமன்றங்களுக்குக் கோடை விடுமுறை அளிக்க்ப்பட்டு  வருகின்றன.  இந்த கால கட்டத்தில் அவசர வழக்குகள் மட்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.   இந்த அண்டுக்கான கோடை விடுமுறை சென்ற வருடம் அறிவிக்கப்பட்டிருந்தது.

உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14 ஆம் தேதியிட்ட அறிவிப்பில் 2020 ஆம் ஆண்டுக்கான உச்சநீதிமன்ற விடுமுறைகள் மற்றும் கோடை விடுமுறைகள் அறிவிக்கப்பட்டிருந்தன.  இதில் 2020 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி முதல் ஜூன் 19ஆம் தேதி வரையிலான ஐந்து வர விடுமுறை ரத்து செய்யப்பட்டு உச்சநீதிமன்றம் இயங்கும் என அவிக்கப்படுகிறது.

 மேலே குறிப்பிட்டுள்ள 2019 ஆம் வருடம் அக்டோபர் 14 ஆம் தேதி அறிவிப்பில் உள்ள மற்ற விவரங்களில் மாறுதல் ஏதும் இல்லை” என அறிவிக்கப்பட்டுள்ளது.