டில்லி
ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 81,997 ஆக உயர்ந்து 2649 பேர் மரணம் அடைந்துள்ளனர்

நேற்று இந்தியாவில் 3940 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 81,997 ஆகி உள்ளது.  நேற்று 97 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 2649 ஆகி உள்ளது.  நேற்று 1946 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 27,969 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51,374 பேராக உள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 1602 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 27,524 ஆகி உள்ளது  நேற்று 44 பேர் உயிர் இழந்து மொத்தம் 1019 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 512பேர் குணமடைந்து மொத்தம் 6059 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 447 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,674 ஆகி உள்ளது  இதில் நேற்று 2 பேர் உயிர் இழந்து மொத்தம் 66 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 65 பேர் குணமடைந்து மொத்தம் 2240  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் நேற்று 324 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,592 ஆகி உள்ளது  இதில் நேற்று 20 பேர் உயிர் இழந்து மொத்தம் 586 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 191 பேர் குணமடைந்து மொத்தம் 3753 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
டில்லியில் நேற்று 472  பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,470 ஆகி உள்ளது.  நேற்று 9 பேர் மரணம் அடைந்து  இதுவரை மொத்தம் 115 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 187 பேர் குணமடைந்து மொத்தம் 3045 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று 206 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,534 ஆகி உள்ளது  இதில் நேற்று 4 பேர் உயிர் இழந்து மொத்தம் 125 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 65 பேர் குணமடைந்து மொத்தம் 2638 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இந்தியாவில் தற்போது டமன் டையு தாத்ரா நாகர் ஹவேலி யுனியன் பிரதேசங்கள்,, அருணாசல பிரதேசம், மிசோரம், அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய பகுதிகள் கொரோனா பாதிப்பற்ற மாநிலங்களாக உள்ளன.