உத்தரகாண்ட்: 
த்தரகாண்ட் தேசிய பூங்கா அருகே  சிறுத்தைகள்  உலா வரும் பாதையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எந்த பயமுமின்றி நடந்து செல்வதை பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை இரவில், உத்தரகாண்ட்டில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய பூங்கா அருகே பொருத்தப்பட்டிருந்த  கேமராவில் பதிவான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இதில் சிறுத்தைகள் உலா வரும் போது, அதையும் பொருட்படுத்தாமல் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்து செல்வது பதிவாகியுள்ளது.

இதுகுறித்து தன்ஹாவ் ஹோம்ஸ்டே உரிமையாளர் சுனாண்டோ சென் தெரிவிக்கையில், வழக்கமாக இந்த பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் இருக்கும் என்பதால், மனிதர்கள் நடமாட்டம் இருக்காது.  ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் தங்கள் வீட்டுக்கு விரைவாக செல்ல வேண்டும் என்று நினைக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இந்த பகுதியில் நடந்து சென்றுள்ளனர் என்றார்.

இந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மொபைலில் சத்தமாக பாடல்களை பாடி செய்து, டார்ச் லைட் வெளிச்சத்தில் நடந்து செல்வது அங்குள்ள கேமராவில் பதிவாகியுள்ளது. பாடல் சத்தம் கேட்டு வன விலங்குகள் அருகே வராது என்பதை அறிந்துள்ள அவர்கள், தங்கள் கிராமத்தை நோக்கி இரவு நேரத்தில் வேகமாக நடந்து சென்றுள்ளனர்.

ஊரடங்கு காரணமாக லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலையை இழந்து, பணமின்றி,  நடந்தோ, சைக்கிளிலோ அவர்களது சொந்த ஊருக்கு சென்று வருவது குறித்த வீடியோகள், புகைப்படங்கள் வெளியாவது தற்போது வாடிக்கையாகி வருகிறது.

Credit NDTV