மும்பை:
மும்பையின் அரே மற்றும் மஹிம் பகுதிகளில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 1000 தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊருக்கு நடந்தே செல்ல முடிவு செய்து, ரயில் தண்டவாளத்தில் இறக்கி நடக்கத் தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த விவசாயிகள் தெரிவிக்கையில், எங்களுக்கு ரயில் ஏற்பாடு செய்வது குறித்து தமிழ்நாடு அதிகாரிகளிடமிருந்து எந்த பதிலும் இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் ரயில் தண்டவாளத்தில் இறங்கி நடக்க தொடங்கிய அந்த தொழிலாளர்களை ரயில்வே போலீசார் மும்பையில் தடுத்து நிறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மூத்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், விழுப்புரம் நிர்வாக அதிகாரிகள், மும்பை அதிகாரிகளிடம், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகள் செய்வது குறித்து பேசி வருகின்றனர். இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த 8-ஆம் தேதி, மும்பையிலிருந்து 360 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அவுரங்காபாத் பகுதிக்கு அருகில் உள்ள கர்மத் என்கிற இடத்தில் தண்டவாளத்தில் படுத்திருந்த 15 புலம் பெயர் தொழிலாளர்கள் மீது ரயில் ஏறி உயிரிந்த சம்பவத்தை அடுத்து, ரயில் தண்டவாளத்தில் நடப்பதையோ, ஓய்வெடுப்பதையோ மக்கள் தவிர்க்க வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.