மோடி எங்களுக்கு ஏதும் செய்யவில்லை என்று கண்ணீருடன் குற்றம் சாட்டுகின்றனர்.. கால்நடையாக நடந்துசெல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள்.. அவர்களின் பரிதாபகரமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
கொரோனா ஊரடங்கு காரணமாக புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால், அவர்கள் தங்களை சொந்தஊருக்கு செல்ல அனுமதிக்கும்படி மத்திய மாநில அரசுகளிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
அவர்களுக்கு தேவையான வசதிகளை மத்திய மாநில அரசுகள் செய்யாத காரணத்தால், சமீப நாட்களாக நாடு முழுவதும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புவது அதிகரித்து வருகிறது.
ஏராளமானோர் நடந்துச் செல்வதும், சிலர் தங்களிடம் உள்ள சைக்கிள் மற்றும் இருச்சக்கர வாகனங்கள் மூலமும் பல நூறு கிலோ மீட்டர் தூரங்களை பெரும் துயரங்களோ, தங்கள் குழந்தைகள் மற்றும் உடமைகளையும் சுமந்துகொண்டு செல்கின்றனர்…
இவ்வாறு பரிதாபகரமாக செல்லும் மக்கள் மீது பல இடங்களில் வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டு வரும் துர் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. கடந்த வாரத்தில் மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் தண்டவாளத்தில் படுத்திருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் ஏறியதில் 16 பேர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவங்களும் அரங்கேறின.
இன்று தங்களது சொந்த ஊருக்கு சாலை மார்க்கமாக நடந்துசென்றுகொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்களிடம், பிபிசி செய்தியாளர் பேட்டி கண்டார். அப்போது அவர்கள் தங்கள் மனக்குமுறலை கொட்டினர்.
மோடி அரசு தங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
குழந்தைகள் நடக்க முடியாத நிலையில், அவர்களை சைக்கிளின் முன்பகுதியில் வைத்தும், பின்சீட்டில் தங்களது பாத்திர பண்டங்களையும் வைத்துக்கொண்டு குடும்பம் குடும்பமா நடந்து செல்வதை காணும்போது, அதை காண்போர் கண்களில் கண்ணீர் வழிந்தோடுவதை தடுக்க முடியாது.
பெரும்பாலான தொழிலாளர்கள் காலில் செருப்பு இன்றி கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது நடந்து செல்வதைக் கண்ட செய்தியாளர் தனது ஷுவை, செருப்பில்லாமல் நடந்துச்சென்ற இளம்பெண்ணுக்கு கொடுத்து உதவினார்.. அந்த பெண்ணும், அவரது ஷுவை பெற்றுக்கொண்டு மீண்டும் தங்களது பயணத்தை தொடரும் காட்சி… பரிதாபகரமானது..
இது நமது இந்தியாவா என கேள்வி கேட்கத் தோணுகிறது…
கொரோனாவின் தாக்கம் ஒருபுறம் என்றால் நமது ஆட்சியாளர்களின் தான்தோற்றித்தனம் மற்றொரு புறம்…
இதன் விளைவே இன்று நம் சொந்த நாட்டு மக்களே அனாதையாகவும், ஆதரவற்றவர்களாகவும் மாறிப்போன சூழல் ஏற்பட்டு உள்ளது.