தோல்கா:
குஜராத் மாநிலத்தில் 2017ம் ஆண்டு நடைபெற்ற டோல்கா சட்டமன்ற தொகுதி தேர்தல் செல்லாது என்று குஜராத் மாநில உயர்நீதி மன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கி உள்ளது. இதனால் அங்கு வெற்றிபெற்று சட்ட அமைச்சராக உள்ள பாஜக உறுப்பினரின் பதவி கேள்விக்குறியாகி உள்ளது.
குஜராத் மாநிலத்தில் கடந்த 2017ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே வெற்றித் தோல்வி நூற்றுக்கணக்கான வாக்குகளே வித்தியாசமான இருந்தது.
தேர்தலில் காங்கிரஸ், பாஜக மட்டுமின்றி தேசியவாத காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் வாக்குகளை பிரித்த நிலையில் சுயேச்சைகளும் தங்கள் பங்குக்கு வாக்குகளை பிரித்தனர். இதனால் வெற்றித்தோல்வி நூற்றுக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்திலேயே இருந்தது.
குறிப்பாக, டோக்லா மற்றும் பேத்புரா உள்பட 8 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் 2000 வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்திலே தோல்வியை தழுவி உள்ளனர்.
டோல்கா தொகுதியில் காங்கிரஸ் கட்சி 327 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த தொகுதியில் 69.27% வாக்குகளைப் பதிவுசெய்தது.
டோக்லா தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பூபேந்திரா சிங் (Bhupendrasinh Manubha Chudasama) 71,530 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அஸ்வின்பாய் காம்சுபாய் ரத்தோட் 71, 203 வாக்குகள் பெற்றிருந்தார்.
327 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றியைத் தட்டிச்சென்றது. இத்தொகுதியில் பகுஜன் சமாஜ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் முறையே 3139 மற்றும் 1198 வாக்குகளை பிரித்தது/
பாஜகவின் வெற்றியை எதிர்த்து காங்கிரஸ் தரப்பில் குஜராத் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை நடைபெற்றுமுடிந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
தீர்ப்பில், டோக்லா சட்டமன்ற தொகுதித் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டு உள்ளது. இதனால் தற்போது மாநில சட்ட அமைச்சராக உள்ள பூபேந்திரா சிங்கின் பதவி கேள்விக்குறியாகி உள்ளது.