ஒட்டாவா: கனடா நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68,839 என்பதாக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும், புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,148 பேர்.
கனடாவின் பல மாகாணங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நோயைக் கட்டுப்படுத்தவும், மக்களின் வாழ்வாதாரத்தை அதிகப்படுத்தவும் அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறார்.
நோய் பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை 69 ஆயிரத்தை நெருங்குகிறது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 1,148 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், புதிதாக 178 பேர் பலியாகியுள்ளனர்.
கனடாவின் மொத்த கொரோனா பாதிப்புகளில் 80% க்கும் அதிகமான பாதிப்புகள், அந்நாட்டின் கியூபெக் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளது. அங்கு, 142 பேர் இதுவரை மரணமடைந்துள்ளனர். ஒட்டுமொத்த தேசிய பலி எண்ணிக்கையில் இந்த மாகாணத்தில் மட்டும் 60% நிகழ்ந்துள்ளது.
கியூபெக் கனடாவின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணமாகும். தற்போது 32,000க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சையில் உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]