அகமதாபாத்:
கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம்  குஜராத் முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக  நாடு முழுவதும்  மார்ச் 24-ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை முதல்கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் 2-ஆம் கட்டமாக  மே 3-ஆம்  தேதி நீட்டிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மே 17-ஆம் தேதி வரை 3வது கட்டமாக ஊரடங்கு  நீட்டிக்கப்பட்டது.  அதன்படி மே 17ந்தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்த நிலையில், மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், தளர்வுகள், பொருளாதார மந்தம் குறித்து  பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்கள்,மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பல தரப்பினருடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இன்று மீண்டும் 5வது முறையாக அனைத்து  மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இதில் பல மாநில முதல்வர்கள் நிதி கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. தமிழக முதல்வர் சுமார் 3 ஆயிரம் கோடி அளவில் நிதி கோரியுள்ளார்.
இநத் நிலையில், ஊரடங்கை மேலும்  நீட்டிக்க வேண்டுமென பிரதமர் மோடியிடம், குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.