டெல்லி:
நாடு முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு (lockdown) 3 முறை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாலை பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம் மீண்டும் ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. 3முறை நீட்டிக்கப்பட்ட லாக்டவுன் வரும் 17ந்தேதியுடன் முடிவடைகிறது.
இந்த கொரோனா ஊரடங்கால் அனைத்து தொழில் நிறுவனங்களும், போக்குவரத்தும் மூடப்பட்ட தால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 4ந்தேதி முதல் சில நிறுவனங்கள் செய்லபடவும், கடைகள் திறக்கவும் படிப்படியாக சில தளர்வுகள் கட்டுப்பாடுகளுடன் அறிவிக்கப்பட்டு வருகிறது.
12ந்தேதி முதல் சில பயணிகள் ரயில் போக்குவரத்தும், 17ந்தேதிக்குபிறகு மாநில பேருந்து போக்குவரத்துகளும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், ஊரடங்கு தொடர்பாவுகம், பொருளாதார மீட்பு குறித்தும் விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.