சென்னை:
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் சிவகங்கை மருத்துவமனை யில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நிலையில்,சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழகத்தில் கொரோனா சென்னை உள்படசில மாவட்டங்களில் தீவிரமாகி வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுபோல ராமநாதபுரம் மாவட்டத்தில் 23 பேர் பாதிக்கப்பட்டனர்.
ராமநாதபுரத்தைச்சேர்ந்தவர்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இவர்களில் 14 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலைய்ல் மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், கீழக்கரையைச் சேர்ந்த ஆயிசத்து பிர்தவுஸ் பீவி (வயது 77) என்ற மூதாட்டி, மூச்சுதிணறலால் வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதன்மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனாவால் முதல் மரணம் ஏற்பட்டுள்ளது.