டில்லி
ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59,695 ஆக உயர்ந்து 1985 பேர் மரணம் அடைந்துள்ளனர்

நேற்று இந்தியாவில் 3344 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  மொத்த எண்ணிக்கை 59,695 ஆக உள்ளது.  நேற்று 96 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1985 ஆகி உள்ளது.  நேற்று 1111 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 17,887 ஆகி உள்ளது.  தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 39,819 பேராக உள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 1089 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,063 ஆகி உள்ளது  நேற்று 37 பேர் உயிர் இழந்து மொத்தம் 731 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 169 பேர் குணமடைந்து மொத்தம் 3470 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் நேற்று 390 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,403 ஆகி உள்ளது  இதில் நேற்று 24 பேர் உயிர் இழந்து மொத்தம் 449 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 163 பேர் குணமடைந்து மொத்தம் 1872 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
டில்லியில் நேற்று 388 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,318 ஆகி உள்ளது  இதில் நேற்று இருவர் உயிர் இழந்து மொத்தம் 68 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 89 பேர் குணமடைந்து மொத்தம் 2070 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 600 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,009 ஆகி உள்ளது  இதில் நேற்று 3 பேர் உயிர் இழந்து மொத்தம் 40 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 58 பேர் குணமடைந்து மொத்தம் 1605 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று 152 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 3,579 ஆகி உள்ளது  இதில் நேற்று 4 பேர் உயிர் இழந்து மொத்தம் 103 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 122 பேர் குணமடைந்து மொத்தம் 2011 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.