சென்னை:
மிழகத்தில் உள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களை அவர்களது மாநிலத்துக்குச் அழைத்துச் செல்ல 7 சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இன்று வேலூரில் இருந்து 2வது ரயில் புறப்படுகிறது.

தமிழகத்தில் தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்களை ஏற்றிச் செல்ல 9 சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை, கோவை, வேலூரில் இருந்து வடமாநிலங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகாருக்கு ஒரு சிறப்பு ரயிலும், ஜார்க்கண்டிற்கு 2 சிறப்பு ரயில்களும், மேற்கு வங்கத்திற்கு 4 சிறப்பு ரயில்களும் சென்னையில் இருந்து இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது  கோவை மற்றும் வேலூரில் இருந்து தலா ஒரு சிறப்பு ரயில் மீனவர்கள் மற்றும் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மற்றும் ஜார்கண்டிற்கு புறப்பட்டு செல்கிறது.
சிறப்பு ரயில் மூலம் 9 ஆயிரம் தொழிலாளர்களை பீகார், ஜார்க்கண்ட், மே.வங்கம் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெளி மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்களை குழுவாக அழைத்து வந்து பாதுகாப்பாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்,  வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளை அழைத்துச் செல்ல தனி ரயில் விடக்கோரி வலியுறத்தப்பட்டு வந்தது. ஏற்கனவே நேற்று முன்தினம் ஒரு ரயில் புறப்பட்டுச் சென்ற நிலையில், இன்று 2வது ரயில் வேலூர் காட்பாடியில் இருந்து சந்திஷ்கர் மாநிலம் இயக்கப்படுகிறது.
இதில் செல்ல 1,140 நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் தயாராகி உள்ளனர்.