சென்னை:
சென்னையில் உள்ள சிட்லப்பாக்கம் ஏரி தூர்வாரும் பணி மீண்டும் தொடங்கி உள்ளது.

குரோம்பேட்டை அடுத்த சிட்லப்பாக்கம் பேரூராட்சியில் சுமார் 102 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த தூரி பல ஆண்டுகாலமாக தூர்வாரப்படாமல் இருந்ததால், அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்தது.

இதையடுத்து, கடந்த ஆண்டு (2019) அந்தப்பகுதி பொதுமக்கள் குளத்தை தூர்வாரும்படி அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.  பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த ஏரியை முறையாக பராமரிக்காத தால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் குப்பை இந்த ஏரியில் கொட்டப்பட்டு நீர் மாசடைந்து வருவதாகவும்புகார் அளித்தனர். இதற்கிடையில் ஏரியில் பலர் குடிசைகள் போட்டு ஆக்கிரமிப்பும் செய்தனர்.
ஆனால், அரசு இதை கண்டுகொள்ளாத நிலையில்,  சிட்லப்பாக்கம் பகுதி மக்கள் 500 பேர் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் இணைந்து ஏரியை தூர்வாரி சீரமைக்கும் பணியை தொடங்கினார். இதனால் அச்சம் அடைந்த அதிமுக அரசு, ஏரியை தூர்வார ரூ.25 கோடி ஒதுக்கி, ஆக்கிரமிப்புகள் அகற்றி தூர்வாரும் பணியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.
ஆனால், இந்த நேரத்தில் கொரோனா தொற்று ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், ஏரி தூர் வாரும் பணி முடங்கியது. தற்போது 3வது ஊரடங்கு நீட்டிப்பட்ட நிலையில், சில பணிகளுக்கு மே 4ந்தேதி முதல் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏரியில் தூர்வாரும் பணி மீண்டும் தொடங்கி உள்ளது.  பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது.
ஏரியை தூர்வாரும் காட்சி…