சென்னை

றைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றத் தமிழக அரசு கையகப்படுத்த உள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டனில் அவருக்குச் சொந்தமான வேதா இல்லம் என்னும் வீட்டில் வசித்து வந்தார்.  அவருடைய மறைவுக்குப் பிறகு அந்த வீடு யாருக்குச் சொந்தம் என்பதில் சர்ச்சை எழுந்தது.  அந்த வீட்டைத் தமிழக அரசு கையகப்படுத்தி அதை நினைவிடமாக மாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.  அப்பகுதி மக்கள் அதை எதிர்த்து வந்தனர்.

அதே வேளையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் இதை எதிர்த்து தமிழக அரசுக்கு மனு அளித்தார்.   ஆயினும் தமிழக அரசு போயஸ் கார்டன் இல்லத்தை கையகப்படுத்த அனுமதி கோரி ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளித்தது.   இது குறித்து அலுவலக அதிகாரிகள் அங்குள்ள மக்களிடம் கருத்துக்களைக் கேட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அளித்துள்ள விளம்பரத்தில் ஜெயலலிதா வசித்த வேதா இல்லம் நினைவிடமாக மாற்றத் தமிழக அரசு கையகப்படுத்த அளித்துள்ள பரிந்துரையை ஒட்டி இந்த இடம் கையகப்படுத்தப்படுத்த உள்ளதாக  தெரிவிக்கபட்டுள்ளது.  மேலும் இந்த இடம் நினைவிடமாக மாற்ற மட்டுமே கையகப்படுத்தப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.