புதுடெல்லி: நாட்டின் பொருளாதாரத்தைப் புதுப்பிக்க வேண்டுமெனில், கீழ்நிலையிலுள்ள 60% மக்களுக்கு அரசின் சார்பில் பண உதவி வழங்கப்பட வேண்டுமென்று கூறியுள்ளார் நோபல் பரிசுபெற்ற அபிஜித் பானர்ஜி கூறியுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அபிஜித் பானர்ஜி இதைக் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, “சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறைகளுக்கு நிதியுதவி வழங்குவதைவிட, மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதுதான் சிறந்த வழி.
அத்தகைய நிறுவனங்களின் மீது கவனம் செலுத்துவது சரியான வழியா? என்பது குறித்து ஒரு தெளிவு கிடைக்கவில்லை. இது பொருளாதார புதுப்பிப்பைப் பற்றியது. ஒவ்வொருவரின் கையிலும் பணம் இருந்தால், அவர்கள் தயாரிப்புப் பொருட்களை வாங்குவார்கள்.
செலவழிப்பது ஒன்றுதான் பொருளாதாரத்தை புதுப்பித்தலுக்கான ஒரே வழி. ஒருவரின் கணக்கில் ரூ.10000 பணம் இருந்தால், அவர் ஊரடங்கு முடிந்ததும் அந்தப் பணத்தை செலவு செய்வார்.
இந்தியா ஏற்கனவே பொருளாதாரப் பிரச்சினையில் சிக்கியிருந்தது. இந்த ஊரடங்கு நிகழ்வுக்குப் பிறகு, அது இன்னும் மோசமடையும்” என்றார் அபிஜித் பானர்ஜி.
அமெரிக்காவிலுள்ள மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில், ஃபோர்டு ஃபவுண்டேஷன் சர்வதேச பொருளாதாரப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார் பானர்ஜி என்பது குறிப்பிடத்தக்கது.