அமராவதி:
கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக மதுக்கடைகளும் மூடப்பட்ட நிலையில், இன்று சில மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
ஆந்திராவில் திறக்கப்பட்ட மதுக்கடையில் ஒரு நபர் டெல்லி பிராந்தி பாட்டிகள் வாங்கியதுடன், அதை கையில் வைத்துக்கொண்டு புன்னகையுடன் ஆட்டம் போடுகிறது. அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி முதல் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது மூன்றாவது முறையாக மே 17ந்தேதி நீட்டிக்கப்பட்டா லும், பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இதையடுத்து, டெல்லி, மும்பை, கர்நாடகா, ஆந்திரா போன்ற சில மாநிலங்களில் 40 நாட்களுக்குப் பிறகு இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதனால் மதுக்கடைகள் முன்பு மக்கள் கூட்டம் அலைமோதியது ஆனால், அவர்கள் சமூக விலகலை கடைபிடித்தே மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.
ஆந்திர மாநிலத்தில் சுமார் 3,500 கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஒரு கடையில் ஒரு நபர் 2 பிராந்தி பாட்டில்களை வாங்கிக்கொண்டு கடை முன்பு புன்னகையுடன் குத்தாட்டம் போடுகிறார். அது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
Video – Thanks: News18