வீடுகளில் இருந்தே ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாண வைபோகத்தை கண்டு களித்ததுடன், தங்களது மங்கள நாணையும் மாற்றிக்கொண்டனர்.
மதுரை திருவிழா உலகப்புகழ் பெற்றது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவை காண பல்வேறுஉலகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் மதுரையில் குவிவது வழக்கம். மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டு காணப்படும்.
ஆனால், இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு காரணமாக, பல நூற்றாண்டு காலமாக நடைபெற்று வந்த சித்திரைத் திருவிழா ரத்து செய்யப்பட்டது. அதையடுத்து, திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மற்றும் நடைபெறும் என்றும், அதை பக்தர்கள் ஆன்லைனில் தரிசிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று காலை 9.05 மணி முதல் 9.29 மணிக்குள் சுவாமி சன்னதி முதல் பிரகாரத்தில் உற்சவ மூர்த்தி அமைந்துள்ள சேத்தி மண்டபத்தில் 4 சிவாச்சாரியார்கள் மட்டும் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி இந்த திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார்கள்.
Video Courtesy IBC Tamil