
மதுரையில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வானது சுந்தரேஸ்வரர் – மீனாட்சி அம்மன் தெய்வீக திருக்கல்யாண நிகழ்ச்சி தான்.
இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்களை மகிழ்விக்கும் விதமாக மதுரை மீனாட்சி அம்மன் தெய்வீக திருக்கல்யாண நிகழ்ச்சியை நாளை திங்கட்கிழமை காலை 9 மணி முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப உள்ளது.பக்தர்களும் பார்வையாளர்களும் திருக்கல்யாண உற்சவத்தை முழுமையாக கண்டுகளிக்கலாம்.
Patrikai.com official YouTube Channel