சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர் குஷ்பு கொரோனா முழு அடைப்பு என்பதால் வீட்டிலேயே இருக்கும் குஷ்பு இன்று காலைஉடற்பயிற்சி செய்த போட்டோவை வெளியிட்டார்.
அதனுடன் “நல்ல ஒர்கவுட்டை விட சிறந்தது எதுவும் இல்லை. அதற்காக ஒரு விலையுயர்ந்த ஜிம்மிற்கு செல்ல வேண்டும் என்கிற அவசியம் இல்லை. வீட்டிலேயே செய்யலாம். ஒரு நாளை பாசிடிவான விதத்தில் துவங்க இது ஒரு வழி.. தாமதம் ஆகிவிடவில்லை. அதுக்கு நான் கேரன்டி” என ட்விட் செய்திருந்தார் .
அதில் not என்கிற வார்த்தையை அவர் போட தவறியதால் அர்த்தம் மாறிவிட்டதாக அனைவரும் சுட்டிக்காட்டினர். அதற்கு மன்னிப்பு கேட்டு மற்றொரு ட்விட் பதிவிட்டுள்ளார் குஷ்பு.


“ஆக்டிவாக இருப்பவர்கள் எழுதும் போது ஒரு சில வார்த்தைகளை விட்டுவிடுவதுண்டு. அவர்கள் கையை விட மூளை இன்னும் வேகமாக டைப் செய்வது தான் காரணம். நான் அப்படிப்பட்டவர் தான். தவறுக்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்” என குஷ்பு கூறியுள்ளார்.