கடந்த சில வருடங்களாகவே புற்று நோய்க்கு எதிராக சிகிச்சை எடுத்து வந்த ரிஷி கபூர். நேற்று (ஏப்ரல் 29) உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார்.
இன்று (ஏப்ரல் 30) காலை 8:45 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவரது உயர் பிரிந்தது. ரிஷி கபூருக்கு வயது 67.
இவர் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரின் தந்தை ஆவார்.இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கம் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் .
ரிஷி கபூரின் மறைவு குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் ட்வீட்டில் :-
Multifaceted, endearing and lively…this was Rishi Kapoor Ji. He was a powerhouse of talent. I will always recall our interactions, even on social media. He was passionate about films and India’s progress. Anguished by his demise. Condolences to his family and fans. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) April 30, 2020
“பன்முகத்தன்மை, அன்பான குணம் மற்றும் சுறுசுறுப்பு கொண்டவர் ரிஷி கபூர். மிகுந்த திறமைசாலியாக அவர் இருந்தார். எங்களுடைய உரையாடல்களை எப்போதும் நான் நினைவில் கொள்வேன். சமூக வலைதளங்களில் கூட சினிமா மற்றும் இந்தியாவின் வளர்ச்சி ஆகியவற்றில் தான் அவர் ஆர்வம் கொண்டிருந்தார். அவருடைய மறைவு வேதனையைத் தருகிறது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி” என பதிவிட்டுள்ளார் .