திருவனந்தபுரம்

ஊரடங்கின் போது வயநாடு மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே வந்து சுற்றினால் 5ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என கேரள மாநிலத்தின்  வயநாடு மாவட்டக் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் கடைகளில் சோப்புகள் அல்லது சானிடைசர்கள் இல்லையென்றால் ரூ 1000 அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இது குறித்து வயநாடு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆர்.இளங்கோ, “கொரோனாத் தொற்றால் தற்போது ஊரடங்கு நடைமுறையில் உள்ள சூழலில் முகக்கவசம் இன்றி வெளியே சுற்றித் திரிபவர்களிடம் 5000 ரூபாயும், சோப்புகள் அல்லது சானிடைசர்கள் இல்லையென்றால் கடைகளுக்கு 1000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது கேரளாவில் 486 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.