கொல்கத்தா
வரும் மே மாதம் 4 ஆம் தேதி முதல் மேற்கு வங்க மாநிலத்தில் ஊரடங்கு தளர்த்துவது குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி விளக்கம் அளித்துள்ளார்.
கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா பரவுதல் கட்டுக்குள் வராததால் ஊரடங்கு மே மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
தற்போது நாட்டில் கொரோனா அதிகமுள்ள பகுதிகள் சிகப்பாகவும் மிதமாக உள்ள பகுதிகள் ஆரஞ்சாகவும் பாதிப்பற்ற பகுதிகள் பச்சையாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
வரும் மே மாதம் 3 முதல் ஊரடங்கு முடிவடையும் நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் அப்போது, “கொரோனா குறைவாக உள்ள ஆரஞ்சு மற்றும் பாதிப்பு இல்லாத பச்சை பகுதிகளில் மே மாதம் 4 ஆம் தேதி முதல் ஊரடங்கைத் தளர்த்த முடிவு செய்துள்ளோம்.
நிலைமை முழுமையாக சீரடைந்தல் வரும திங்கள்கிழமை முதல் பொது முடக்கத்தில் தளர்வு அமல் படுத்த உள்ளோம். அப்போது அத்தியவசியப் பொருட்கள் விற்கும் கடைகளை முழுமையாகத் திறக்க நடவடிக்கை எடுக்க உத்தேசித்துள்ளோம்.
அதே வேளையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள சிகப்பு பகுதிகளில் எவ்விதத் தளர்வும் அனுமதிக்கப்பட மாட்டாது.” என அறிவித்துள்ளார்.