சென்னை:
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்றும் அதிக அளவில் உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 104 பேருக்கு உறுதியான நிலையில், மொத்த எண்ணிக்கை 2162 ஆக உயர்ந்துள்ளது. இந்த 104 பேரில் 94 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.
நேற்றும் புதிதாக 121 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில், சென்னையில் மட்டும் 103 பேர் பாதிக்கப்பட்டி ருந்தனர். இன்றும் அதுபோலவே அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் நிலவரம் குறித்து சென்னை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 94 பேர்உள்பட 104 பேருக்கு புதியதாக பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், அரியலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விருதுநகர், திருவள்ளுர் மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதாகவும்,
இன்று 82 பேர் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,210 ஆக உயர்ந்துள்ளது
இன்றைக்கு புதிதாக 2 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
Patrikai.com official YouTube Channel