சென்னை:

ல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான தமிழக ஏடிஜிபி மத்திய அரசுப்பணிக்கு சென்ற நிலையில், அவருக்கு டிஜிபி பதவி உயர்வு அளிக்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து மீண்டும் தமிழக அரசுப் பணிக்கு திரும்பியுள்ளார்.

1989ம் ஆண்டு ஐபிஎஸ் கேடரைச் சேர்ந்தவர் ஏடிஜிபி மாகாளி.  ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். ஏற்கனவே கோவை மாநகர காவல் ஆணையர், சென்னை போக்குவரத்து அடிஷனல் கமிஷனர் உள்பட பல பதவிகளில் பணியாற்றியுள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டு இவர் மத்தியஅரசு பணிக்கு விண்ணப்பித்து,  ல்எலைப் பாதுகாப்பு படைப் பிரிவுக்கு தேர்வானார். ஆனால், அவருக்கு டிஜிபி புரோமஷன் வழங்க தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தியது. ஆனால், அதை ஏற்க உள்துறை மறுப்பு தெரிவித்துவிட்டது. இதையடுத்து,  தன்னை மத்தியஅரசு பணியில் இருந்து விடுவிக்கும்படி கே.சி.மாகாளி வேண்டுகோள் விடுத்தார்.

இதை மத்திய அரசும் ஏற்று தமிழகத்துக்கு அனுப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.  தமிழகத்தில் 5 பேரைதான் டிஜிபிக்களாக நியமிக்க முடியும். ஆனால்,  ஏற்கனவே திரிபாதி, ஜாபர்சேட், லட்சுமி பிரசாத், கரன்சின்கா, சைலேந்திரபாபு, சஞ்சய் அரோரா, சுனில்குமார், சுனில்குமார் சிங் ஆகிய 9 பேர் டிஜிபிக்களாக உள்ளனர்.

இந்த நிலையில் மாகாளிக்கு டிஜிபி பதவி வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.  மாகாளி பணி ஓய்வு பெற இன்னும் ஒருமாதம் மட்டுமே உள்ள நிலையில் அவரது பணி மாற்றம் காவல்துறை வட்டாரத்தில்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.