சண்டிகர்:
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில், வெளி மாநிலங்களில் இருந்து பஞ்சாப் திரும்பு அனைவரும் 21 நாட்கள் தனிமைபடுத்தப்படுவார்கள் என்று பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், நந்தேடில் இருந்து திரும்பும் அனைத்து யாத்ரீகர்கள், ராஜஸ்தானிலிருந்து வரும் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள அனைவரும் பஞ்சாப் மாநில எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு, 21 நாட்களுக்கு அரசு தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்றார்.
வெளிமாநிலத்தில் வசித்து வந்த பஞ்சாப் மக்கள், வீடு திரும்ப தேவையான வசதிகளை பஞ்சாப் அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இதையடுத்து கடந்த மூன்று நாட்களாக அவர்கள் பஞ்சாப் திரும்ப தொடங்கியுள்ளனர்.
மாநிலத்தின் கொரோனா பாதிப்பை குறைத்து ஊரடங்கு உத்தரவை தளர்த்த என்ன செய்ய வேண்டும் என்றும் நிபுணர் குழுவினர் வழங்கிய அறிவுறுத்தல்களின் அடிப்படையில், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட்டால், தனது அரசாங்கம் சில தளர்வுகளை செய்ய முடியும் என்று அமரீந்தர் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு நிலைமை மற்றும் மாநிலத்தில் நடந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் வீடியோ கான்பிரன்சிங் அவர் நடத்திய விவாதத்தின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இதில் பேசிய சில எம்.எல்.ஏக்கள், இன்னும் சில வாரங்களுக்கு மிகக் குறைந்த தளர்வுகளுடன், கடுமையான நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும் மாநிலங்கள் மட்டுமல்ல, மாவட்டங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையில் எல்லைகள் சீல் வைக்கப்பட வேண்டும் என்றும் அவர்களிடம் முதலமைச்சர் கூறினார்.
எந்தவொரு கொரோனா வைரஸ் நோயாளிகளும் மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டும் அல்லது வெளியில் தொடர்பு மற்றும் வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்த தங்கள் மாவட்டத்திற்குள் சிகிச்சை அளிக்க வேண்டும், அவர்கள் கட்டுப்பாடுகளை நீக்குவதில் தீவிர எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினர்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பஞ்சாபில் தனிமைப்படுத்திய பின்னர் திருப்பி அனுப்புமாறு உத்தரபிரதேசம் வேண்டு கோள் விடுத்திருந்தது. இதற்கு பதிலளித்த முதல்வர். இதுகுறித்து உத்திரபிரதேச முதல்வரிடம் பேசுவதாகவும் கூறினார்.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 35 நாட்களுக்குப் பிறகும் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டிய அவர், பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில், இந்த ஊரடங்கு ஜூலை வரை தொடரும் என்று மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.