ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் அனைவரும் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து வீடு திரும்பியதைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் கொரோனா பாதிப்பு இல்லாத பச்சை மண்டலமாக மாறி உள்ளது.
தமிழகத்தில் அதிக பாதிப்புகளை சந்தித்த மாவட்டமாக இருந்தது ஈரோடு. அங்கு மாவட்ட நிர்வாகம் எடுத்த கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, கொரோனாவின் பிடியில் இருந்து முற்றிலும் விடுபட்டு வருகிறது.
இந்த மாவட்டத்தில் தொற்று உறுதி செய்யப்பட்ட 70 பேரும் படிப்படியாக குணமடைந்து வீடு திரும்பினர். கடைசியாக சிகிச்சை பெற்ற வந்த நான்கு பேரும் இன்று வீடு திரும்பினர்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதித்த 70 பேரில் 69 பேர் குணமடைந்துள்ளனர் – ஒருவர் உயிரிழந்தனர்.
மேலும், கடந்த கடந்த 12 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் புதிதாக எந்த தொற்று பரவலும் உறுதி செய்யப்படவில்லை. இதன் காரணமாக ஈரோடு மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது. இது விரைவில் பச்சை மண்டலமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையடுத்து, ஈரோடு மாவட்டதைச்சேர்ந்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரான செங்கோட்டையன், கொரோனா பணியில் முழுவமையாக தங்களை ஈடுபடுத்தி பணியாற்றிய
மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மை பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக மத்தியஅரசு வெளியிட்டுள்ள பட்டியலில்,
கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு வரும் மாநிலங்களில் 3வது இடத்தில் தமிழகமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.