கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் மக்கள் தங்கள் நேரத்தை செலவழிக்க பல விஷயங்களை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது நடிகை ஆண்ட்ரியா தனது வீட்டிலேயே ஐபோனில் எடுக்கப்பட்ட ஒரு குறும்படத்தில் நடித்துள்ளார். ஆதவ் கண்ணதாசன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ‘லாக்டவுன்’ என்றே பெயரிட்டுள்ளனர் . இதில் இப்போது இந்த ஊரடங்கில் நடந்துகொண்டிருக்கும் விஷயத்தைப் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூற முயற்சித்துள்ளனராம்.
முழுக்க முழுக்க ஐபோனில் எடுக்கப்பட்டுள்ள இக்குறும்படம் நாளை (29.04.20) வெளியாகவுள்ளது.