சென்னை:
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கோயம்பேடு மார்கெட்டை மூடினால், மீண்டும் ஊரடங்கு முடியும் வரை காலவரையின்றி பழ மார்க்கெட்டை மூடுவோம் என்றும், தங்களுக்கு வேறு இடத் வேண்டாம் என்றும் வியாபாரிகள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
கோயம்பேடு மார்க்கெட்டில் சமூக விலகல் கடைபிடிக்காததால், 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டை கேளம்பாக்கம் பகுதிக்கு மாற்ற தமிழகஅரசு முடிவு செய்து வணிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்த நிலையில், கோயம்பேடு கோயம்பேடு பழ வியாபாரிகள் சங்கம், தங்களுக்கு வேறு இடம் வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
இன்று காலை 8 மணியளவில் அனைத்து சங்கங்களின் அவசரக் கூட்டம் கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் சென்னை பழக்கமிஷன் ஏஜெண்டுகள் சங்கத் தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது சென்னை மாநகராட்சி அறிவித்தப்படி மாற்று இடத்தில் வியாபாரம் செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. பெரும்பாலான வியாபாரிகள், அது என்பது நடைமுறை சாத்தியமில்லாதது என்று கூறினர். மேலும், கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவுவது, அதிகமான வாகன நெரிசல் போன்றவற்றிற்கு கட்டுபாடில்லாத காய்கறி வர்த்தக முறையே காரணமாகும்.
ஆனால், கோயம்பேடு மார்க்கெட்டில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை பழ வியாபாரம் முடங்கிய நிலையில் தான் உள்ளது. இந்த நிலையில் இடமாற்றம் செய்தால், ஆட்கள் பற்றாக்குறை, போக்குவரத்து இடையூறுகள், மீதமாகும் பழங்களின் பாதுகாப்பு போன்ற நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.
இதனால் இடம் மாற்றம் செய்வது, நடைமுறைக்கு ஒத்துவராது என்று பேசிய பழ வியாபாரிகள், சென்னை மாநகராட்சி அறிவுறுத்திய இடமாற்றத்தை ஏற்க முடியாது என்றும், அரசின் மறு உத்தரவு வரும் வரை காலவரையன்றி கோயம்பேடு பழ மார்க்கெட்டை மூடுவதெனவும் அனைத்து சங்கங்களின் சார்பில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.