சென்னை :
கொரோனா வைரஸ் நோயாளிகளை குணப்படுத்த தேவையான மருந்து தன்னிடம் இருப்பதாக கடந்த நான்கு மாதங்களாக கூறிவருகிறார் சித்த மருத்துவர் டாக்டர் திருத்தணிகாசலம்
உலக மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தவேண்டிய உலக சுகாதார அமைப்போ இன்று வரை இதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் ஒவ்வொரு நாளும் எதிர்மறையான கருத்துக்களையே உலக மக்களுக்கு சொல்லி வருவதுடன், உலகில் வாழும் 750 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் மனதில் அவநம்பிக்கையை ஏற்படுத்திவருகிறது.
மேற்கத்திய நாடுகளை தவிர, மற்ற நாடுகளில் மாற்று மருத்துவ முறைக்கு பல்வேறு நாடுகள் முன்னுரிமை அளித்துவருகிறது. உலக சுகாதார அமைப்போ மாற்றுமருந்துகளால் பலன் கிடைக்கும் என்றால் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று கூறி நழுவிக்கொண்டது.
இந்தியாவில் ‘ஆயுஷ்’ அமைச்சகம் கொரோனா வராமல் பாதுகாத்துக்கொள்ள பல்வேறு மாற்று வழிமுறைகளை அறிவுறுத்தியுள்ளது. தற்போது, தமிழகத்தில் கபசுர குடிநீர் வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிலையில், நோய் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இத்தனை மரணத்திற்கும் உலக சுகாதார அமைப்பே பொறுப்பேற்கவேண்டும், உலக சுகாதார அமைப்பு மருந்து கம்பெனிகளின் ஏஜெண்டாக செயல்படுகிறது, என்று குற்றம் சாட்டியுள்ளார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் டாக்டர் திருத்தணிகாசலம்.
இந்த உலக சுகாதார அமைப்பின் பேச்சை கேட்டு, உழைத்து வாழ்ந்து கொண்டிருந்த மக்களை ஒருவேளை சோற்றுக்கு வீதியில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கும் அரசின் நடவடிக்கையை கண்டு மனவேதனை அடைவதாகவும், மக்கள் இதனை தட்டிகேட்கவேண்டும் என்றும், தன்னிடம் உள்ள மருந்தை பரிசோதிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் மிகுந்த வருத்தத்துடன் தனது கருத்தை விடியோவாக வெளியிட்டுள்ளார் டாக்டர் திருத்தணிகாச்சலம், இவரின் இந்த கோரிக்கைக்கு உலக சுகாதார அமைப்பு செவி சாய்க்குமா ?