டெல்லி

கொரோனாத் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் செப்டம்பர் மாதம் கல்லூரிகளைத் திறக்க யுஜிசி க்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

மே மூன்று வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் கல்வி நிலையங்கள் அனைத்தும் தேர்வுகளை ஒத்தி வைத்துள்ளன. கல்லூரி திறப்பது குறித்து ஊரடங்கு முடிந்த பின்பு தான் முடிவெடுக்கப்படும் என மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கூறியிருந்தது.

இந்நிலையில் அடுத்த கல்வியாண்டில், செப்டம்பர் மாதம் கல்லூரிகளைத் திறக்க யுஜிசி க்கு நிபுணர் குழு  பரிந்துரை செய்துள்ளது.

இணைய வழியில் மாணவர்களுக்கு வகுப்புகள் மற்றும் தேர்வுகளை நடத்தவும் அக்குழு  பரிந்துரைத்துள்ளது.

தற்போது மாணவர்களுக்கு பல கல்வி நிலையங்கள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.