கொல்கத்தா: முதன்முறையாக கொரோனாவால் 57 பேர் இறந்துள்ளதாக மேற்கு வங்க அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆனால் அவர்களில் 39 பேர் உடல்நலக்குறைவு ஏற்பட்டவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவிட் 19 காரணமாக 18 பேர் மட்டுமே உயிரிழந்ததாக தலைமைச் செயலாளர் ராஜீவா சின்ஹா ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
39 பேருக்கு மற்ற உடல்நிலை கோளாறுகளும் இருந்துள்ளன. அதனுடன் கோவிட்19 தற்செயலானது என்றார். வங்கத்தின் கொரோனா வைரஸ் இறப்பு புள்ளிவிவரங்கள் குறித்து மத்திய தணிக்கைக் குழு கேள்விகளை எழுப்பியது.
முன்னதாக, கோவிட் 19 காரணமாக இறப்புகளை உறுதிப்படுத்த அமைக்கப்பட்ட குழு, மத்திய அரசின் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலால் பரிந்துரைக்கப்பட்டதா என்பதை மத்திய குழு அறிய விரும்பியது.