டில்லி

ன்று காலை 10 மணிக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளார்.

கொரோனா வைரச் பாதிப்பை கட்டுப்படுத்த உலகின் பல நாடுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளன.  இந்தியாவில் கடந்த 14 ஆம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது.  அன்று முதல்  தொழிலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.  தினசரி கூலி தொழிலாளர்கள் நிலை மிகவும் பரிதாபமாகி உள்ளது.   பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதையொட்டி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ரூ.1.7 லட்சம் கோடி மதிப்பிலான நிவாரண உதவி திட்டங்களை  அறிவித்தார். அதில் கடன் மாதாந்திர தவணை குறித்த அறிவிப்புக்கள் இடம்பெறாததால் நடுத்தர மக்கள் ஏமாற்றம் அடைந்தன.  அதையொட்டி மக்கள் கடன் தவணை தொகைகளைத் தாமதமாகச் செலுத்த சலுகைகள் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

கடந்த 27 ஆம் தேதி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஒரு காணொளி செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தினர்.  அப்போது அவர், பொதுமக்களின், விவசாய, வீடு, மற்றும் வாகன்க் கடன்களுக்கான 3 மாத தவணைகளை வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் வசூலிக்க வேண்டாம். எனவும் வட்டி குறைப்பு சலுகைகளையும் அறிவித்தார்.

கடந்த 14 ஆம் தேதி அன்று பிரதமர் மோடி கொரோனா பாதிப்பு குறையாததால் ஊரடங்கை வரும் மே மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.  இதையொட்டி இன்று காலை 10 மணிக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.  அப்போது அவர் கடன் தவணைகள் குறித்து மேலும் சலுகைகள் அறிவிக்கலாம் எனக் கூறப்படுகிறது.