சேலம்:

ஸ்லாமிய மதபோதனைக்காக இந்தோனேசியாவிலிருந்து சேலம் வந்த 11 பேர் உட்பட 16 பேர்  சிறையில் அடைக்கப்பட்டனர்.

வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களால் இந்தியாவில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில், இந்தோனேசியாவில் இருந்து சேலத்திற்கு இஸ்லாம் மத போதனைக்காக வந்த 11 பேரில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.  அவர்களுக்கு கொரோனா தொற்று குணமான நிலையில்,  அவர்கள் 11 பேர் உள்பட அவர்களுக்கு உதவி செய்த 6 பேர் உள்பட 16 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இவர்கள் சுற்றுலா விசாவில் இந்தியா வந்து மதபோதனையில் ஈடுபட்டதாகவும், வெளிநாட்டிலி ருந்து வந்த தகவலை மறைத்தது, நோய்த்தொற்றை பரப்பியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக அவர்கள் மீது கிச்சிப்பாளையம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்தனர்.

இவர்கள் 16  பேரையும், காணொலி காட்சி மூலம் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். நீதிபதி அனைவரையும் சிறையிலடைக்க உத்தரவு பிறப்பித்தார்.  இதையடுத்து 16 பேரும் சென்னை அழைத்து வரப்பட்டு,  புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.