தமிழகத்தில் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், மே 3-ம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நலனை கருத்தில் கொண்டு பலர் நிதியுதவி செய்து வருகின்றனர் . சில தினங்களுக்கு முன்பு 3 கோடி ரூபாய் கொடுத்துள்ளார் லாரன்ஸ். அதனைத் தொடர்ந்து ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் நடிக்கவுள்ள படத்தின் சம்பளத் தொகையிலிருந்து 25 லட்ச ரூபாயினை தூய்மைப் பணியாளர்களுக்காக அளித்துள்ளார்.

தற்போது விநியோகஸ்தர்கள் சங்கத்துக்கு 15 லட்ச ரூபாய் நிவாரண உதவியை லாரன்ஸ் அளித்துள்ளார்.

திருவள்ளூர் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவரான டி.ராஜேந்தர் சங்கத்தின் நிலை குறித்த என் தர்மசங்கட நிலைமையை எடுத்துரைத்தேன். அவர் உடனே “அண்ணே, உங்களுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன்” என்றார். “தம்பி எனக்கு எதுவும் வேண்டாம். என் சங்கத்திலிருக்கும் நலிவடைந்தவர்களுக்காகச் செய்தால் போதும்” என்றேன்.

உடனே ராகவா லாரன்ஸ் மனமுவந்து எங்கள் சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க அறக்கட்டளைக்கு 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அனுப்பி வைத்தார் என கூறி ராகவா லாரன்ஸிற்கு நன்றி தெரிவித்தார் .