ஜெனிவா:

லக நாடுகளை அச்சுறுத்தி வரும், கொரோனா வைரசுக்கு இதுவரை 1லட்சத்து 26ஆயிரத்து 811 பேர் பலியாகி உள்ளனர். அதுபோல, வைரஸ் தொற்றால்  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20லட்சத்து, 4ஆயிரத்து 383 ஆக உயர்ந்து உள்ளது.

அதேவேளையில் கொரோனா தொற்றில் இருந்து 4லட்சத்து 85ஆயிரத்து 303 பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்து உள்ளது.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இதுவரை 210க்கும் மேற்பட்ட  நாடுகளில் பரவி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.  இதை தடுக்க தேவையான மருந்துகள் கண்டு பிடிக்கப்படாத நிலையில், உலக சுகாதாரத்துறை நிறுவனம், நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைந்துள்ளது.

இந்த நிலையில்,  இன்று காலை   நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது.  ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 811 பேர் உயிரிழந்துள்ளனர். 4 லட்சத்து 85 ஆயிரத்து303  பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கொரோனா பாதிக்கப்பட்டு  13 லட்சத்து 88 ஆயிரத்து 738 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களின்  51 ஆயிரத்து 603 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா வைர்ஸ் தொற்றால் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளது அமெரிக்கா. இங்கு இதுவரை   26,064 பேர் பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கையில் உலகில் முதலிடத்தில் உள்ளது.

2வது இடத்தில் இத்தாலி உள்ளது. அங்கு  21,067 பேர் உயிழந்துள்ளனர்.

3வது இடத்தில், ஸ்பெயினில் 18,255 பேரும், பிரான்சில் 15,729பேரும், பிரிட்டனில் 12,107 பேரும் பலியாகி உள்ளனர்.