பாரிஸ்: கொரோனா வைரஸ் பரவலால் பிரான்ஸ் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 15000 ஐ தாண்டிவிட்டது. இது அந்நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 762 பேர் பலியாகினர். இதன்மூலம், அந்நாட்டில் ஏற்பட்ட மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளது.

மொத்தம் 15,729 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், மொத்த கொரோனா பலி எண்ணிக்கையில் உலகில் நான்காவது இடத்திற்கு வந்துள்ளது கொரோனா வைரஸ்.

இதுவரை, அங்கு 1,43,300 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். மக்கள் தொகையில் 5% முதல் 10% மக்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இருக்கலாம் என்று அதிபர் இமானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார்.

அந்நாட்டில், மே மாதம் 11ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவித்துள்ளார் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்.