https://www.instagram.com/p/B-54ZE9jN0H/
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து நாடுகளும் திணறி வருகிறது. ஏழை பணக்காரன் எனும் பாகுபாடின்றி அனைவரையும் தாக்கி வருகிறது
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது மத்திய அரசு . நாளையுடன் அந்த 21 நாட்கள் முடிவடைவதால் இன்று மேலும் இரு வாரங்கள் நீடித்துள்ளனர் .
இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர் . திரையுலகினர் பெரும்பாலும் சமூகவலைத்தளத்திலேயே தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் .
இந்நிலையில் இயக்குநர் மணிரத்னத்தின் மனைவி சுஹாசினி தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “4 தசாப்தங்களாக அவரது படத்தை நீங்கள் பார்த்து வருகிறீர்கள். இப்போது அவர் உங்களைப் பார்க்கும் நேரம். உங்களைப் பற்றிய அறிமுகத்தோடு உங்கள் கேள்வியை 25 வினாடிகளுக்குள் வீடியோ எடுத்து அதை 90946 77777 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள். உங்கள் வீடியோக்களைப் பார்த்து இயக்குநர் மணிரத்னம் பதிலளிப்பார்”.என்று தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]