டெல்லி:

லக நாடுகளில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ள கொரோனா வைரஸ், அமெரிக்காவை புரட்டிப்போட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் தங்கியுள்ள அமெரிக்கர்கள், தங்களது தாய்நாட்டுக்கு திரும்புச் செல்வதை தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது.

கொரோனா பரவல் காரணமாக உலக நாடுகளுக்கு இடையே விமானப்போக்குவரத்து தடை செய்யப்பட்ட நிலையில், பல வெளிநாடுகளைச் சேர்ந்த பலர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், அவர்கள் தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அவர்கள் இங்கே பத்திரமாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.  அவர்களை அழைத்துச் செல்ல பல நாடுகள் தனி விமானங்களை அனுப்பி அழைச்செல்கிறது.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவைச்சேர்ந்த  444 பேர் தங்களது சொந்த நாட்டிற்கு பயணமாகி னர். ஆனால், அமெரிக்க நாட்டினர், தங்களது சொந்த நாட்டுக்கு செல்வதில் இருந்து பின்வாங்க விரும்புகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை  444 ஆஸ்திரேலிய நாட்டினரை டெல்லியில் இருந்து மெல்போர்னுக்கு சிறப்பு விமானத்தில் திருப்பி அனுப்பிய நிலையில்,கொரோனாவின் தீவிர பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா மாறி வரும் நிலையில், இங்குள்ள அமெரிக்கர்கள் அங்கு திரும்பிச்செல்வதை விரும்பவில்லை.

சமீபத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை திரும்ப அழைத்துச் சென்றதாக டிவீட் செய்துள்ளார். அதைத்தொடர்ந்து,  இந்த வார தொடக்கத்தில், வௌநாடுகளில், சிக்கியுள்ள அமெரிக்கர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்ல அமெரிக்க வெளியுறவுத்துறை சிறப்பு விமானங்களை இயக்கி வந்தாலும், பல அமெரிக்க பிரஜைகள், அங்கு செல்ல விரும்பவில்லை என்றும், தற்போதைய நிலையில்,  இந்தியாவிலேயே  தங்க விரும்புகிறார்கள் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில்  பல்லாயிரக்கணக்கான அமெரிக்கவர்கள் பணியாற்றி வரும் நிலையில், இந்த வாரம்  சென்ற விமானத்தில் 800 பேரை அழைத்துச்செல்ல முடிவு செய்யப்பட்டு, அழைப்பு விடுத்தபோது, தங்களுக்கு நெகடிவான பதில்களே கிடைத்தன என்று தெரிவித்துள்ள தூதரக அதிகாரிகள்,  10 சதவிகிதம் பேர் மட்டுமே அமெரிக்க திரும்ப முன்வந்துள்ளதாக கூறி உள்ளனர்.

இந்தியாவில்  தங்கியுள்ள  24,000 அமெரிக்க நாட்டினர் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.