வாஷிங்டன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 71, 892 உயர்ந்து 18,51,734ஆகி இதுவரை 1,14,179 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  71,892 பேர் அதிகரித்து மொத்தம்18,51,734 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5400 அதிகரித்து மொத்தம் 1,14,179 பேர் உயிர் இழந்துள்ளனர்.  4,23,286 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளனர்.  50,784  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

நேற்றும் பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிர் இழந்தோர் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிக அளவில் உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  27,523 பேர் அதிகரித்து மொத்தம் 5,6,402 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1528 அதிகரித்து மொத்தம் 22,105 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 32,634  பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 11,766 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

ஸ்பெயினில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  3804 பேர் அதிகரித்து மொத்தம் 1,66,831 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 603 அதிகரித்து மொத்தம் 17,209 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 62,391 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 7371  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இத்தாலியில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  4092 பேர் அதிகரித்து மொத்தம் 156,363 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 431 அதிகரித்து மொத்தம் 19,899 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 34,211 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 3343 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

பிரான்சில் நேற்று 561 பேர் உயிரிழந்து மொத்த எண்ணிக்கை 14,393 ஆகி உள்ளது.  இங்கு நேற்று 2937 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 1,32,591 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 759 பேர் அதிகரித்து மொத்தம் 9205 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 43 அதிகரித்து மொத்தம் 331  பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1080  பேர் குணம் அடைந்துள்ளனர்.