அசாம்:
ப்ரல் 13 முதல் மதுகடைகளை திறக்க அசாம் அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6412 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 199 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 504 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் அசாம் மாநிலத்தில் கொரோனா வைரசுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டது. ஹைலகண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 65 வயது நபர் கொரோனா வைரசுக்கு பலியாகியிருப்பதாகவும், வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏப்ரல் 13 முதல் மதுகடைகளை திறக்க அசாம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அசாம் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் 13 முதல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு நின்று வாங்கி செல்லலம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.