பட்டியாலா
பட்டியாலா நகரில் ஊரடங்கை மீறி கூட்டமாக வந்தவர்களை கட்டுப்படுத்த முயன்ற காவல் அதிகாரியின் கை வெட்டப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையிலுள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள காய்கனி சந்தைக்கு, நிஹாங்குகள் எனப்படும் தீவிர சீக்கிய சமய பற்றாளர்கள் காலை 6 மணிக்கு கூட்டமாக வந்துள்ளனர்.
அவர்களை துணை ஆய்வாளர் ஹர்ஜுத்சிங் தலைமையிலான காவல்துறையினர் கட்டுப்படுத்த முயன்றனர். அப்போது நிஹாங்குகள் காவல்துறை அதிகாரியின் கையை வெட்டியுள்ளனர்.
இது தொடர்பாக பட்டியாலா காவல்துறை ஆணையர் தின்கர் குப்தா செய்தியாளர்களிடம் பின்வருமாறு கூறினார். “துணை ஆய்வாளர் ஹர்ஜீத்சிங்கின் கை வெட்டப்பட்டதோடு இரு காவலர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
தாக்கியவர்கள் நிஹாங் குருத்வாராவிற்கு உடனே தப்பி சென்று விட்டனர். பின்னர் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி உள்ளே சென்றபோது அவர்கள் ஆயுதங்களோடு வெளிப்பட்டனர். அவர்களிடமிருந்து வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக” தின்கர் குப்தா தெரிவித்தார்.