
நியூயார்க்: கொரோனா வைரஸ் காரணமாக, அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20000 ஐ தாண்டியது.
இதன்மூலம், உலகிலேயே கொரோனா வைரஸ் தொற்றுக்கு அதிக மக்களை பலிகொடுத்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்துள்ளது.
கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை அளவிலும் அந்நாடு முதலிடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலையில், அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,29,740 பேர். மரணமடைந்தோர் எண்ணிக்கை 20,600.
இத்தாலியில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 19,468. ஸ்பெயின் நாட்டில் 16,606 பேர் பலியாகியுள்ளனர்.
அதேசமயம், கொரோனா வைரஸ் முதன்முதலில் பரவத் தொடங்கிய சீனாவில், இதுவரை பலியானோர் எண்ணிக்கை 3339 என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel