டெல்லி:

ஜெஇஇ தேர்வெழுதும் மாணவர்கள் தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

ஜே.இ.இ பிரதானத் தேர்வு NTA எனப்படும் தேசிய தேர்வு முகமையால் ஒரு வருடத்தில் இருமுறை நடத்தப்படுகிறது. ஜே.இ.இ பிரதான தேர்வில், முதல் தாள் தேர்வு ஜனவரி  மாதத்திலும், 2வது தேர்வு ஏப்ரல் மாதமும் நடைபெறுவது வழக்கம்.

ஆனால், தற்போது கொரோனா பரவல் காரணமாக, ஜெயியி 2வது தேர்வு தேதி ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. மீண்டும் தேர்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஜெஇஇ தேர்வெழுதும் மாணவர்கள் தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ளலாம் என்றும்,  தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் செய்யவும் தேசிய தேர்வு முகமை அனுமதி அளித்துள்ளது.