பெங்களூரு:

ர்நாடக மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சம்பளத்தில் 30% குறைக்க மாநில அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு அதிக அளவில் பணம் தேவைப்படுவதால், மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.

அதன் ஒருபகுதியாக எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி 2 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படுவதாகவும், குடியரசுத்தலைவர் உள்பட எம்.பி.க்கள் வரை அனைவரது சம்பளத்திலும் 30 சதவிகிதம் கட் செய்யப்படுவதாகவும் மத்தியஅரசு அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், கர்நாடக மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களின் ஊதியத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்ய  கர்நாடக அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இன்று முதல்வர் எடியூரப்பா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத் தில், அதற்கான முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும்,  ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஓராண்டுக்கான ஊதியத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்ய முடிவெடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த 30 சதவிகித பிடித்தம் காரணமாக  சுமார் 15.36 கோடி ரூபாய் கிடைக்கும். இதை  கொரோனா நிவாரண நிதிக்கு பயன்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.