டெல்லி:

கொரோனா பரிசோதனைக்கு சோதனைக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், தனியார் நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. காணொளி காட்சி மூலம் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின்போது, ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துசார் மேத்தா, கொரோனா தடுப்புப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு மிகச் சிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகவும், அவர்கள்
மருத்துவமனைகளின் அருகில் உள்ள சொகுசு விடுதிகளில் மருத்துவர்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிபதிகள்,  கொரோனா சோதனைக்குத் தனியார் மருத்துவமனைகள் அதிகக் கட்டணம் பெறுவதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், கட்டணம் பெறக் கூடாது என்றும்,  தனிநபர்களின் சோதனைக் கான கட்டணத்தை அரசே ஏற்கலாமே?  என்று கருத்து தெரிவித்தது மேலும்,  தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்களுக்குக் கட்டணத்தை அரசே செலுத்துவதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் கூறி உள்ளது.

ஊரடங்கு குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.