டெல்லி:
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற தப்லிகி ஜமாத் மாநாடு காரணமாக இந்தியாவில் கொரோனா தொற்று பரவியது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே நிஜாமுதீன் மவுலானா மீது காவல்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த நிலையில், தற்போது, மேலும் 150 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் தொடர்பாக அனைந்து மாநிலங்களும் உஷார்படுத்தப்பட்ட நிலையில், டெல்லியில், இஸ்லாமியர்கள் கலந்துகொண்ட தப்லிஜி மார்க்காஸ் மாநாடு நடைபெற்றது. இதில் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்ட நிலையில், நாடு முழுவதும் இருந்து சுமார் 8,000 பேர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த மாநாட்டில் கலந்துகொண்ட நபர்களுக்கு கொரோனா நோய்த்தோற்று, வெளிநாட்டு விருந்தினர்கள் மூலம் பரவியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அவர்களை அடையாளம் காணும் பணி முடுக்கி விடப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், இமாம் தப்லிஜி மார்க்காஸ் மாநாடு நடத்த காரணமான தப்லிகி ஜமாஅத்தைச் சேர்ந்த 150 பேர் மீது டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவுகளை மீறியதற்காக (ஐபிசி செக். 271) மற்றும் அரசாங்க உத்தியோகபூர்வ தடுப்பு உத்தரவை மீறியதற்காக (ஐபிசி செக் 188) ஆசாத் மைதான காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 271 & 188 இன் முந்தைய இரண்டு பிரிவுகளைத் தவிர, ஐபிசி செக் 269 இன் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.