’’ ஊரடங்கை இழுங்க’’  தெறிக்க விட்ட தெலுங்கானா


21 நாள் ஊரடங்கு எல்லோரையும் களைப்பாக்கி விட்டிருப்பதே நிஜம்.

‘எப்படா கதவ தொறப்பாங்க? என்று ஆளாளுக்கு கேள்வி கேட்கிறார்கள்.

பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்த ஆணையின் படி வரும் 14 ஆம் தேதி ஊரடங்கு முடிகிறது.

மறுநாள் முதல் பழைய வாழ்க்கையைத் தொடரலாம் எனப் பலர் கனவுகளில் மிதக்க, பக்கத்து மாநிலமான தெலுங்கானா முதல்-அமைச்சர் கே.சந்திரசேகர் ராவ்’’ ம்ஹும். இது போதாது’’ என்று உதட்டைப் பிதுக்கியுள்ளார்.

‘’14 ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீடிக்க வேண்டும். பொருளாதார சரிவை எப்போது வேண்டுமானாலும் மீட்டுக்கொள்ளலாம்.,போன  உயிரை மீட்க முடியுமா?’’ என்று கேள்வி எழுப்புகிறார், ராவ்.

ஐதராபாத்தில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சந்திரசேகர் ராவ்’’ பிரதமர் அவர்களே.. கொரோனா உயிர்க் கொல்லி நோயைத் தடுக்க ஊரடங்கைத் தவிர நம்மிடம் வேறு ஆயுதம் இல்லை.எனவே தயங்காமல் , ஊரடங்கை நீடித்து ஆணையிடுங்கள். ஒவ்வொரு முதல்வரிடமும், நீங்கள் (மோடி) ஆலோசனை கேட்டு, தீர்க்கமான முடிவுக்கு வர வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்..

– ஏழுமலை வெங்கடேசன்