நெல்லை
கொரோனா மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் குறித்து தவறாகப் பேசியதாக மாரிதாஸ் மீது நெல்லை காவல்துறை நான்கு பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளது/
இந்தியாவில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆயினும் நாடெங்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. டில்லி நிஜாமுதின் மசூதியில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாட்டில் கலந்துக் கொண்டவ்ர்க்ளால் இந்த பாதிப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரபல பாஜக ஆதரவாளரான மாரிதாஸ் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் அப்போதைய ஹாட் டாபிக் குறித்த தகவல்களைப் பற்றி வீடியோ மற்றும் பதிவுகள் வெளியிடுவது வழக்கமாகும். கொரோனா பரவுதல் பற்றி அவர் சமீபத்தில் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கொரொனா தொற்றையும் இஸ்லாமிய அமைப்புக்களையும் இணைத்து மாரிதாஸ் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள கருத்துக்களால் மதப் பிரச்சினை வெடிக்கும் என பலரும் விமர்சித்துள்ளன்ர். இதையொட்டி நெல்லை காவல்துறை மாரிதாஸ் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது